உள்ளூர் செய்திகள்
கொரோனா

மதுரையில் 1,200ஐ நெருங்கும் கொரோனா பலி

Published On 2022-01-23 08:27 GMT   |   Update On 2022-01-23 08:27 GMT
மதுரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,200-ஐ நெருங்குகிறது.
மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 1-ந் தேதி முதல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.  குறிப்பாக நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 900-த்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 565 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தீராத காய்ச்சல், இரு மலால் பாதிக் கப்பட்டோர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத் திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் பெரும் பாலான மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 649 பேருக்கு நோய் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அது மட்டும் தான் இப்போதைக்கு ஒரே ஆறுதல்.

மதுரை மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4775 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 84572  பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 78578 பேருக்கு நோய் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.  1199 பேர் கொரோனா பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். 

மதுரை மாவட்டத்தில் 1050 இடங்களில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் 19-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் 47 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2199 படுக்கைகளில் 328 பேருக்கும், 954 சாதாரண படுக்கைகளில் 132 பேருக்கும், 676 தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளில் 78 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அளவில் கொரோனா பரவல் சதவீதம் 12.1 என்ற அளவில் உள்ளது.

Tags:    

Similar News