உள்ளூர் செய்திகள்
தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்- தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

Published On 2022-01-23 07:06 GMT   |   Update On 2022-01-23 07:06 GMT
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்-என்று தஞ்சை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் 
ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  காடந்தங்குடி கிராமம் , பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்தூர் கிராமம் மற்றும் சேதுபாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டவயல் கிராமம் பகுதிகளில்   பசுமை வீடு திட்ட பணிகள் குறித்து  ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கிராமத்தை சேர்ந்த பொது மக்களிடம் மாதாந்திர முதியோர் உதவித் தொகை முறையாக வழங்கப்படுவது குறித்தும், குடிமைப் பொருட்கள்  முறையாக  வழங்கப்படுவது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் முறையாக அகற்றபடுவது குறித்தும் கேட்டறியப்பட்டது. 

பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News