உள்ளூர் செய்திகள்
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்த காட்சி.

நெல்லையில் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Published On 2022-01-23 06:14 GMT   |   Update On 2022-01-23 06:24 GMT
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று இயக்கப்பட்ட வாடகை வாகனங்களின் உரிமையாளர்களை போலீசார் அழைத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.
நெல்லை:

இன்று முழு ஊரடங்கையொட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தங்களது வீடுகளுக்கு பயணிகள் செல்வதற்காக  வாடகை கார் மற்றும் ஆட்டோக்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரத்தில் ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் வாடகை வசூலிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.  சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  

அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று இயக்கப்பட்ட வாடகை வாகன உரிமையாளர்களை போலீசார் அழைத்து அறிவுரை வழங்கினர்.

ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான், சத்தியதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார், கூடுதல் வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு  எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News