உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மின்,குடிநீர் வாரிய கட்டணத்தை சரியாக செலுத்த வேண்டும் ஊராட்சிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.

Published On 2022-01-22 11:29 GMT   |   Update On 2022-01-22 11:29 GMT
ஊராட்சி நிர்வாக வசதிக்காக 12 வகை வங்கி கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் அரசு ஒதுக்கும் மானியம் தனித்தனியாக பிரித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது
திருப்பூர்

குறிப்பிட்ட கணக்குகளில் உள்ள  ரொக்கத்தை  அந்தந்த திட்டம் மற்றும் செலவு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.ஊராட்சி நிர்வாகம், மின்வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகத்துக்காக கட்டணம் செலுத்தி வருகின்றன. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும்  மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைகளுக்கு  சமீபமாக வட்டி வசூலிக்கப்படுகிறது.

அரசு ஒதுக்கப்படும் நிதிக்குழு மானியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இரண்டாம் எண் கணக்கில் ஒதுக்கி, அதிலிருந்து மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண செலவு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சிகளின் வங்கி கணக்கு விவரங்கள் குறித்த ஆய்வு கூட்டம்  கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் கலெக்டர் வினீத் பேசுகையில், அரசு ஒதுக்கும் மானிய உதவி மூலமாக மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியத்துக்கான கட்டணத்தை சரிவர செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஒவ்வொரு ஊராட்சியிலும் 2 மற்றும் 3&ம் எண் வங்கி கணக்கில் உள்ள ரொக்க இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,  ஊராட்சிகளின் வங்கி கணக்கில் உள்ள  ரொக்கம் குறித்து விசாரிக்கப்பட்டது. இரண்டாவது கணக்கு மற்றும் திட்ட பணிகளுக்கான மூன்றாவது கணக்கில்  கூடுதல் நிதி ஆதாரம் இருந்தால் அவற்றில் அத்தியாவசிய பணிகளை செய்யலாம். குறிப்பாக குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது  என்றனர்.

Tags:    

Similar News