உள்ளூர் செய்திகள்
கனிமொழி எம்.பி. கையெழுத்திட்ட காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி.

எல்.ஐ.சி. கையெழுத்து இயக்க நிறைவு நிகழ்ச்சி-கனிமொழி எம்.பி. பங்கேற்பு

Published On 2022-01-22 10:14 GMT   |   Update On 2022-01-22 10:14 GMT
தூத்துக்குடியில் நடந்த எல்.ஐ.சி. கையெழுத்து இயக்க நிறைவு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.
தூத்துக்குடி:

எல்.ஐ.சி. பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருவதற்கு எதிர்ப்பை  தெரிவிக்கும் வகையில் காப்பீட்டு கழகத்தினர்,  பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

அரசு நிதி பற்றாக்குறை என்ற காரணத்திற்காக எல்.ஐ.சி. பங்குகளை விற்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்துவரும் நிலையில் தற்போது அதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
 
தூத்துக்குடியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக கடந்த 3 நாட்களுக்கு முன் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம்  தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து 100-க்கணக்கானவர்கள் எல்.ஐ.சி. பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்திட்டனர். நேற்று மாலை காப்பீட்டுக்கழக  ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்   நிறைவு நிகழ்ச்சி நடந்தது. 

 தொடர்ந்து மத்தியஅரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர்   எல்.ஐ.சி.  அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த பேனரில்  தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர். 

அவர்களை தொடர்ந்து தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரிய சாமி, மாநகர  செயலாளர் ஆனந்த சேகரன், உள்ளிட்ட தி.மு.க-.வை சேர்ந்தவர்கள், எல்.ஐ.சி. சிவராம கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள்  கையெழுத்திட்டனர்.
Tags:    

Similar News