உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.

செங்கோட்டை கோவிலில் சங்கடகர சதுர்த்தி

Update: 2022-01-22 09:17 GMT
செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:

செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சங்கடகர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. 

பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 

ஏராளமான பக்தர்கள் அரசு விதிமுறை படி முககவசம்அணிந்தும்,  சமூக இடைவெளி கடைபிடித்தும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். 

மேலும் இதே போன்று வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர் ஸ்ரீமுக்தி விநாயகர் வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 

பால விநாயகர், விநாயகர் கோவில்களில் ஹோமம், யாகம் இல்லாமல் சிறப்பு பூஜை மட்டும் நடந்தன. பூஜையில் அரசின் விதிமுறைபடி பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News