உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வார்டு வாரியாக கோவில் மீட்பு குழுக்கள்- இந்து முன்னணி அறிவிப்பு

Published On 2022-01-22 06:09 GMT   |   Update On 2022-01-22 06:09 GMT
தமிழக அரசு இந்துக்களுக்கு பாதகமாக நடந்துகொள்வதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நிலத்தை கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக பயன்படுத்த பொதுமக்கள் அனுமதி பெற்றனர். 

அங்கு தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக வருவாய்த்துறையினர் தடுப்புகளை அகற்றினர். கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தும் நிலத்தை கோவில்வசம் ஒப்படைக்க வேண்டுமென கோரி இந்து முன்னணி மற்றும் செவந்தாம்பாளையம் பொதுமக்கள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நில மீட்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அப்போது இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், 

தமிழக அரசு இந்துக்களுக்கு பாதகமாக நடந்துகொள்கிறது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சதி நடந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவில் பண்டிகைக்கு நிலத்தை பயன்படுத்த விடாமல் தடுக்கின்றனர். இந்துக்கள் உரிமையை நிலைநாட்ட வார்டு வாரியாக கோவில் மீட்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றார். 
Tags:    

Similar News