உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொரோனா - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-01-21 06:15 GMT   |   Update On 2022-01-21 06:15 GMT
வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் விபத்தின் போது காயம் மற்றும் உயிரிழக்க நேரிடும்.
அவினாசி:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவர்கள் அவிநாசி போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து அவிநாசி புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் விபத்தின் போது காயம் மற்றும் உயிரிழக்க நேரிடும். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க, முக கவசம் அவசியம் என்ற கருத்துக்களை அரக்கன் வேடமணிந்த மாணவர்கள் சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் வலியுறுத்தினர். 

மாணவ செயலர் ரத்தின கணேஷ் தலைமையில் 17 மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி முன்னிலை வகித்தனர். 

கருமாபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
Tags:    

Similar News