உள்ளூர் செய்திகள்
அமிர்தி பூங்காவில் வன ஊழியர்களுக்கு பரிசோதனை செய்த காட்சி.

அமிர்தி வன உயிரின பூங்கா காலவரையின்றி மூடல்

Published On 2022-01-19 08:47 GMT   |   Update On 2022-01-19 08:47 GMT
கொரோனா பரவல் எதிரொலியால் அமிர்தி வன உயிரின பூங்கா காலவரையின்றி மூடப்படடுள்ளது.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள அமிர்தி வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் பொதுமக்கள் பார்வைக்காக கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க பூங்காவில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் மஞ்சள் பொடி தூவி வருகின்றனர். நுழைவு வாயிலில் பொதுமக்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வன ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் அமிர்தி பூங்காவில் உள்ள வன ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் அமிர்தி பூங்காவை காலைவரையின்றி மூட வனத்துறை உத்தரவிட்டது. 

இதைதொடர்ந்து நேற்று முதல் பூங்கா மூடப்பட்டது. பூங்காவுக்க வந்த சுற்றுலா பணயிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பூங்கா மூடப்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News