உள்ளூர் செய்திகள்
மாட்டுவண்டி போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த காட்சி.

நாகர்கோவில் அருகே மாட்டுவண்டி போட்டி

Published On 2022-01-16 07:09 GMT   |   Update On 2022-01-16 07:09 GMT
நாகர்கோவில் அருகே மாட்டுவண்டி போட்டி நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி  அருகே மாட்டுவண்டி போட்டியை  அமைச்சர் மனோதங்கராஜ், தளவாய்சுந்தரம்,  ஆஸ்டின், முத்துக்குமார்  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

செண்பகராமன்புதூர்  இலந்தை இளைஞர் இயக்கம் சார்பாக 30-வது ஆண்டு மாட்டு வண்டி போட்டி ஆரல்வாய்மொழி காளியங்கோவில் முதல் செண்பகராமன்புதூர்  மரப்பாலம் வரை நடந்தது.

தட்டுவண்டி போட்டியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம்,  பஞ்சாயத்து தலைவர்கள்  கல்யாணசுந்தரம், நெடுசெழியன்   வக்கீல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 வில்வண்டி போட்யை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.  தொடங்கி  வைத்தார். நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன்,  லாயம் ஷேக், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பரமேஸ்வரன், சின்ன தட்டு வண்டிபோட்டியை ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தேரஸ்வரர் ஆலய பக்தர்கள் சங்கதலைவர் முத்துக்குமார்  தொடங்கி வைத்தார்.

தட்டுவண்டி போட்டி யில் முதல்பரிசு பாறையடி சுஜின்சாரா,  2-வது பரிசு  நல்லூர் சுபாஷானி முத்து, 3-வது  பரிசு தேரேகால்புதூர் மனகாவலபெருமாள்.  வில்வண்டி போட்டியில் முதல்பரிசு புதியம்புத்தூர்  ஜெஷ்லி ராஜா, 2-வது பரிசு மேலசூரங்குடி அன்னலெட்சுமி, 3-வது பரிசு. புதியம்புத்தூர்  செல்வம், சின்னதட்டுவண்டி போட்டியில் முதல்பரிசு பெட்டல்குளம் பெரிய நாடார், 2-வது  பரிசு நல்லூர் பைநேசன், 3-வது  பரிசு துவரங்காடு சுந்ரேசன் ஆகியோர் பெற்றனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இலந்தை இயக்க நிர்வாகிகள்   மகேஷ் குமார், மோகன் ராஜாசிங், சுகுமாரன் உள்பட பலர் செய்திருந்தனர். போட்டிகளில் 23 தட்டு வண்டி, 8 சின்ன தட்டு வண்டி,  10 வில்வண்டி  கலந்து கொண்டது.
Tags:    

Similar News