உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் தாதகோனார் சந்து பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவில், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், தாடிக்கொம்பு சவ

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

Published On 2022-01-13 08:33 GMT   |   Update On 2022-01-13 08:33 GMT
திண்டுக்கல் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
திண்டுக்கல்:

மார்கழிமாதம் வைணவ திருத்தலங்களில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் வைகுண்டஏகாதசி சிறப்பு வாய்ந்தது. இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக இரவு நேரத்தில் கோவிலில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5 மணிக்கு மேல் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கருடவா கனத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசலை கடந்து வந்தபோது பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. காலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாதகோனார் சந்து பெருமாள், பழனி லட்சுமிநாராயண பெருமாள், நாகல்நகர் வரதராஜபெருமாள், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
Tags:    

Similar News