உள்ளூர் செய்திகள்
கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

மங்கலம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-01-11 09:45 GMT   |   Update On 2022-01-11 09:45 GMT
மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மங்கலம்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதில் மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் இத்ரீஸ், மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், தி.மு.க. கட்சியின் மாவட்ட பிரதிநிதி சகாபுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கூறுகையில்:

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News