உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சுரண்டையில் கடையில் திருடிய 2 வாலிபர்கள் கைது

Update: 2022-01-10 09:51 GMT
சுரண்டையில் மாற்றுத்திறனாளி பெண் கடையில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:

சுரண்டையை அடுத்த கீழ சுரண்டையை சேர்ந்தவர் மதி செல்வம். இவரது மனைவி மகாலெட்சுமி (வயது 46). மாற்றுத்திறனாளி.

இவர் தனது வீட்டோடு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்கவில்லை. ஆனாலும் ஒரு சிலர் வீட்டுக்கு சென்று அந்த வழியாக பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர். 

இந்நிலையில் அவர் கடையில் வைத்திருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மகாலெட்சுமி, சுரண்டை போலீசில் புகார் அளித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கீழச்சுரண்டையை சேர்ந்த இளவரசன், ஹரிகரசுதன் ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News