உள்ளூர் செய்திகள்
கலெக்டர் சங்கர்லால் குமாவத் கொரோனா விழிப்புணர்வு

பரமக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-09 08:25 GMT   |   Update On 2022-01-09 08:25 GMT
பரமக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார். அப்போது கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  பயணிகள் முக கவசம் அணிந்து செல்கிறார்களா என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முக கவசம் அணி யாமல் பயணித்த பயணி களுக்கு இலவசமாக முக கவசம்  வழங்கி அனைவரும் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். பஸ் நிலையத்தில் இருந்த ஓட்டலில் தடுப்பூசி செலுத் தாமல் ஊழியர்கள் பணியாற்றியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

நகர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை சாலையில் நடந்து சென்று கடைகள், வணிக நிறுவனங்களை கொரோனா தொற்று நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆய்வு செய்தனர். 

கடைகள் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதம் சானிடைசர் வைத் திருக்க வேண்டும். வாடிக்கை யாளர்கள் 50 சதவவீத அளவிலேயே சமூக இடை வெளிவிட்டு பொருட்கள் வாங்க வர வேண்டும். 

உரிமையாளர்கள் ஊழியர்கள் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறை தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல் அவசி யம், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தினர். 

பரமக்குடி கோட்டாட் சியர் முருகன், வட்டாட்சியர் தமீம்ராஜா,  பரமக்குடி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ரவீந்திரன், நகராட்சி ஆணையாளர் அய்யனார் உள்ளிட்ட மருத்துவ, வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News