தஞ்சையில் சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பதிவு: ஜனவரி 09, 2022 12:06 IST
திருட்டு நடந்த கோவில்
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணன் நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கால் வார இறுதி
3 நாட்களில் வழிப்பாட்டு தலம் மூடப்படும் என்பதால் இந்த கோவில் மூடப்பட்டிருந்தது.
கோவில் வெளிக்கதவு இரும்பு கேட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக குடத்தில் துணிக்கட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதில் பக்தர்கள் உண்டியல் பணம் போட்டு வந்தனர். இந்த நிலையில்
இன்று காலை குடம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மர்ம நபர்கள் பக்தர்கள்
செலுத்திய உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்த பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால்
உண்டியல் எண்ணப்படாததால் அதில் எவ்வளவு பணம்
திருட்டு போனது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :