உள்ளூர் செய்திகள்
விமானம்

மதுரை-சார்ஜா விமான சேவை தொடக்கம்

Published On 2022-01-08 12:33 GMT   |   Update On 2022-01-08 12:33 GMT
மதுரை-சார்ஜா விமான சேவை தொடங்கியது.
அவனியாபுரம்

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் இந்தியாவில் இருந்து சில நாடுகளுக்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மதுரையில் இருந்து துபாய், கொழும்பு போன்ற சர்வதேச விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மதுரையில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் ஒன்றான சார்ஜாவிற்கு நேரடியாக பயணிகள் விமான சேவையை தொடங்குகிறது.


இந்த விமானம் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு சார்ஜா சென்றடையும். 

இதேபோல செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சார்ஜா வில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு, காலை 7.50 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News