உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கிழக்கு கோபுர நுழைவாயிலில் இருந்து சாமி கும்பிடும் பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடல்

Published On 2022-01-07 12:08 GMT   |   Update On 2022-01-07 12:08 GMT
கொரேனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று மூடப்பட்டன. கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருஉத்தரகோசமங்கை கோவில்களும் இன்று மூடப்பட்டது.  

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் தடை விதித்தனர். 

இதனால் தகவல் அறியாமல் ராமேசுவரத்திற்கு நேற்று இரவே வந்து குவிந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் அடைந்தனர். 

அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு  கோவிலின் கிழக்கு கோபுர வாசல் நுழைவு பகுதியில் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்தனர். மேலும் அங்கேயே நின்று சாமி கும்பிட்டனர். 
Tags:    

Similar News