உள்ளூர் செய்திகள்
சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் சங்ககிரி மலை உச்சியில் நடைபயிற்சி செய்தபோது எடுத்த படம்.

போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி

Update: 2022-01-07 07:14 GMT
சங்ககிரி மலைக்கோட்டை பகுதியில் போலீசாருக்கு மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
சங்ககிரி:

சங்ககிரி உட் கோட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மகுடஞ்சாவடி, தேவூர், கொங்கணாபுரம், பூலாம்பட்டி உட்பட்ட போலீசார், சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், சங்ககிரி மலை உச்சிவரை ஏறும் பயிற்சியில் இன்று காலை ஈடுபட்டனர். 

 சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ரவி, கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் ஆனந்த், போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தினகரன், அனைத்து மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா மற்றும் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட போலீசார் மலை ஏறும் பயிற்சியில் கலந்து கொண்டு மலை உச்சியில் உள்ள சென்னகேசவபெருமாள் கோவில், தர்கா, விடுதலை போராட்ட வீரர் தீரன சின்னமலை தூக்கிலிட்ட இடங்களை பார்வையிட்டனர். 

இது குறித்து டிஎஸ்பி ஆரோக்கியராஜ் கூறுகையில்,  சங்ககிரி மலைக்கோட்டை வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இந்த மலை ஏறும் பயிற்சியில் உடல் ஆரோக்கியம், மனதுக்கு புத்துணர்ச்சி பெற்று அனைவரும் சந்தோஷம் அடைந்துள்ளோம் என்றார்.
Tags:    

Similar News