உள்ளூர் செய்திகள்
முக கவசம்

திருவேற்காட்டில் பொது இடத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

Published On 2022-01-06 10:04 GMT   |   Update On 2022-01-06 10:04 GMT
திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கூட்ட நெரிசல் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தடுப்பூசி தேவைப்படுபவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பஸ் நிலையம், சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் ரமேஷ்கூறும் போது, ‘கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.

ஆட்டோக்கள், பஸ்கள், வேன்களில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள், நகராட்சி சுகாதாரப் பிரிவை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.
Tags:    

Similar News