உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாணியம்பாடி நர்சுக்கு ஒமைக்ரான் தொற்று?

Update: 2022-01-05 09:56 GMT
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளரா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த,  நர்ஸ் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வேலூர் சங்கரன் பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இவருக்கு உள்ள தொற்று குறித்து மேலும் பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. 

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நர்சுக்கு ஒமைக்ரான் தொற்றா? என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News