உள்ளூர் செய்திகள்
தேவாலயம்

புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-01-01 10:15 GMT   |   Update On 2022-01-01 10:15 GMT
கன்னியாகுமரி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:

2022-ம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு நன்றி ஆராதனை நடந்தது. 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்து பி‌ஷப் நசரேன் சூசை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா தலைமையில் திட்டுவிளை சேகரத்திற்கு உட்பட்ட கலுங்கடி ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை இன்று காலை நடந்தது. நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

சுற்றுலாத் தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கன்னியாகுமரி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து பொது மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தபடியே புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Tags:    

Similar News