உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உணவில் கலப்படம்- புகார் தெரிவிக்க தயங்கும் பொதுமக்கள்

Published On 2021-12-28 08:15 GMT   |   Update On 2021-12-28 08:15 GMT
திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான கடைகளில் புகார் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பாக இடம்பெறவில்லை.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை குறித்து 94440-42322 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு தகவல் தெரிவிக்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள், மாவட்ட நியமன அலுவலரின் பார்வைக்கு செல்கிறது. இதையடுத்து அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து நேரடி ஆய்வும் செய்யப்படுகிறது. பின் எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள், மாவட்ட நியமன அலுவலரால் தொகுக்கப்பட்டு மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு நடவடிக்கை குறித்து தகவலும் தெரிவிக்கப்படுகிறது. சில கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் அதனை அறிந்தும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வணிகக்கடைகள்தோறும் புகார் தெரிவிக்கும் ‘வாட்ஸ் ஆப்’ எண்ணை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான கடைகளில் புகார் தெரிவிக்கும் வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பாக இடம்பெறவில்லை. இதனால் சில உணவகங்கள், தள்ளுவண்டிக்கடைகளில் தரமற்ற உணவு விற்பனை அதிகரிக்கிறது. என்றனர்.  
Tags:    

Similar News