உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்பனை- தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-12-26 06:39 GMT   |   Update On 2021-12-26 06:39 GMT
கள்ளச்சந்தை பயன்பாட்டுக்காக ரேஷன் அரிசி வாங்குவோர் டன் கணக்கில் சேமித்து வைத்து அவற்றை சில அரிசி ஆலைகளுக்கு வழங்குகின்றனர்.
திருப்பூர்:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதந்தோறும் அதிகபட்சம் 20 முதல், 30 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது. பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி வாங்குவதில்லை.

இதை சாதகமாக்கி ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் ரேஷன் கடை விற்பனையாளர்களை சரிக்கட்டி கிலோவுக்கு ரூ.5கொடுத்து அரிசி வாங்கி செல்கின்றனர்.

பொதுமக்கள் சிலர் தங்களுக்கு இலவசமாக கிடைக்கும் ரேஷன் அரிசியை வாங்கி தங்கள் வீடுகளில் வைத்து விடுவர். கள்ளச்சந்தையில் அவற்றை விற்போர் அவர்கள் வீடு தேடி சென்று கிலோவுக்கு ரூ.5  கொடுத்து அந்த அரிசியை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் போலீசார் சிலர் கூறுகையில், கள்ளச்சந்தை பயன்பாட்டுக்காக ரேஷன் அரிசி வாங்குவோர் டன் கணக்கில் சேமித்து வைத்து அவற்றை சில அரிசி ஆலைகளுக்கு வழங்குகின்றனர்.

அந்த அரிசியை ‘பாலீஷ்’ செய்து இட்லி, தோசை மாவு அரைப்போர், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்கின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர். ரேஷன் அரிசி தவிர சர்க்கரை, பருப்பு, பாமலின் உள்ளிட்ட பொருட்களையும்  பணம் கொடுத்து வாங்குகின்றனர்.

ஏழை மக்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படும் ரேஷன் அரிசியின் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News