உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

விதைப்பண்ணையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-12-23 08:51 GMT   |   Update On 2021-12-23 08:51 GMT
தூயமல்லி நெல் ரகமானது 135 நாட்கள் அறுவடை செய்யும் நடுத்தர வயதுடையது.
மடத்துக்குளம்:

பாப்பான்குளத்திலுள்ள மாநில அரசு விதைப்பண்ணையை வேளாண்துறையினர் ஆய்வு செய்தனர். இப்பண்ணை 26.88 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு விதை நெல் உற்பத்தி செய்து சுத்திகரிக்கப்பட்டு சான்றட்டை பொருத்திய பின்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

நடப்பு நிதியாண்டில் பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்கும் திட்டத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் தூயமல்லி பாரம்பரிய நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதோடு இரண்டு ஏக்கர் வி.ஜி.டி 1 அதாவது சன்ன ரக சீரக சம்பாவும் நடவு செய்யப்பட்டுள்ளது. 

அங்கு 13.63 ஏக்கரில் கோ 51 நெல் ரகம் ஆதார நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தூயமல்லி நெல் ரகமானது 135 நாட்கள் அறுவடை செய்யும் நடுத்தர வயதுடையது. பூச்சிநோய் தாக்குதலை எதிர்க்கும் திறன் உடையது. 

இந்தப் பயிர்களின் வளர்ச்சி குறித்து மாநில விதைபண்ணையில் ஆய்வு செய்யப்பட்டது. இத்தகவலை மடத்துக்குளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
Tags:    

Similar News