உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தளிஞ்சிப்பாளையத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2021-12-22 06:53 GMT   |   Update On 2021-12-22 06:53 GMT
கருவூட்டல், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சார்ந்த பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.
அவிநாசி:

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடுவச்சேரி ஊராட்சி தளிஞ்சிப்பாளையத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது. 

கால்நடைகளுக்கு சிகிச்சை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, கருவூட்டல், சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சார்ந்த பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பரிமள ராஜ்குமார் முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் வரதராஜன் முன்னிலை வகித்தார். 

அவிநாசி கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (கூடுதல் பொறுப்பு) இளவரசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமசந்திரன் ஆகியோர் 312 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
Tags:    

Similar News