உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கிறிஸ்துமஸ் பண்டிகை - களை கட்டும் வியாபாரம்

Published On 2021-12-21 06:56 GMT   |   Update On 2021-12-21 06:56 GMT
குடும்பத்தினர், நண்பர்கள் சகிதம் வந்து மனதுக்குப்பிடித்த ஆடை ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
திருப்பூர்:

பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநில தொழிலாளர் பல லட்சம் பேர் வசிக்கின்றனர். வரும் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர். வீடுகளில் மின் விளக்குகள், அழகிய ஸ்டார்களை தொங்கவிட்டுள்ளனர். 

மேலும் புத்தாடைகள் வாங்கி வருகின்றனர். இதனால் புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குடும்பத்தினர், நண்பர்கள் சகிதம் வந்து மனதுக்குப்பிடித்த ஆடை ரகங்களை வாங்கிச் செல்கின்றனர்.  

காதர்பேட்டை பகுதி கடைகளிலும், ஆடை வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கான விழாக்கால ஆடை வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. 

விற்பனை அதிகரித்ததால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பேக்கரி கடைகளில் கேக்குகள் வாங்கி இப்போதே நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்தவர்கள் வழங்கி வருகின்றனர். மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதால் கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. 
Tags:    

Similar News