உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை பகுதியில் வீடுகளில் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள்

Published On 2021-12-20 08:31 GMT   |   Update On 2021-12-20 08:31 GMT
இயேசுபாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூறும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள்.
உடுமலை:

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உடுமலை ஆண்டாள் சீனிவாசன் வீதியிலுள்ள வீட்டில் இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். 

அதேபோல் இயேசுபாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூறும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசுபாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும். 

தற்போது உடுமலை பகுதி கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் மின்னிய வண்ணம் உள்ளன. 
Tags:    

Similar News