உள்ளூர் செய்திகள்
வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

தமிழகம்,சென்னையில் இன்றைய வானிலை நிலவரம் என்ன ?

Published On 2021-12-19 07:26 GMT   |   Update On 2021-12-19 07:38 GMT
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ காற்று எதிரொலியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்  காணப்படும் என்றும்  அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 3 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்.. ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடித்த பலே திருடன் சிக்கினான்
Tags:    

Similar News