உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கைரேகை பதிவில் சிக்கல்- ரேஷன் பொருட்களை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் முதியவர்கள்

Published On 2021-12-19 06:58 GMT   |   Update On 2021-12-19 06:58 GMT
ரேஷன் கடை ஊழியர்கள் கைரேகை பதிவு சரியாக இருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க முடியும் என்று திருப்பி அனுப்புகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே கடைக்கு  சென்று கைரேகை பதிவு மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது.

குடும்பத்தில் இளைஞர்கள் பலர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோராக உள்ளனர். இதனால் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமே ரேஷன் கடைக்கு செல்கின்றனர்.

கைரேகை, வயது அதிகமானவர்களுக்கு சரியாக பதிவு ஆவதில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் கைரேகை பதிவு சரியாக இருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க முடியும் என்று திருப்பி அனுப்புகின்றனர். 

இதனால் முதியவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கைரேகை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தாலுகா அலுவலகம் சென்று விண்ணப்பித்து தீர்வு காணலாம். ஆனால் அனைவராலும் தாலுகா அலுவலகம் செல்ல முடிவதில்லை. 

எனவே ரேஷன் கடையிலேயே முகாம் நடத்தி கைரேகை பதிவு செய்ய முகாம் நடத்த வேண்டுமென மூத்த குடிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News