உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உற்பத்தியை குறைக்க கறிக்கோழி பண்ணையாளர்கள் முடிவு

Published On 2021-12-19 04:39 GMT   |   Update On 2021-12-19 04:39 GMT
பண்ணையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது.
திருப்பூர்

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கறிக்கோழி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது. சமீபகாலமாக பல்வேறு காரணங்களால் தொழில் நஷ்டமடைந்து வருகிறது. இந்நிலையில் பண்ணையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது.

கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், 

கட்டுப்படியாகாத விலையால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

தற்போது சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளது. தீவன விலை உயர்வு, மற்றும் கறிக்கோழி நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க உற்பத்தியை குறைக்க முடிவு செய்துளோம்‘ என்றனர்.
Tags:    

Similar News