உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்.

15-ம்கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-12-18 10:29 GMT   |   Update On 2021-12-18 10:29 GMT
முதல் தவணை செலுத்தியவர் இரண்டாம் தவணையும் தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 14.92 லட்சம் ஆண்கள், 13.85 பெண்கள் என 28 லட்சத்து 79 ஆயிரத்து, 091 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடத்தப்பட்ட 14 மெகா தடுப்பூசி முகாம் மூலம் 18.16 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 10.63 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று மாநகராட்சி பகுதியில் 138 மையங்களிலும், மாவட்டத்தில் 645 மையங்களிலும் 15-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இலக்கை தாண்டி ஒரு லட்சத்து 296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று நடக்கும் மெகா முகாமில் 1.50 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

முதல் தவணை செலுத்தியவர் இரண்டாம் தவணையும் தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி முகாம்களை கலெக்டர் வினீத் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
Tags:    

Similar News