உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த பெண்கள்.

ஏலச்சீட்டு நடத்தி திருப்பூர் பெண்களிடம் ரூ.35 லட்சம் பணமோசடி- மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு

Published On 2021-12-07 08:42 GMT   |   Update On 2021-12-07 10:49 GMT
கடந்த தீபாவளிக்கு முன்பாக அனைவரும் சீட்டு பணத்தை திரும்ப தாருங்கள் என கேட்டுள்ளனர்
திருப்பூர்:

திருப்பூர் அருள்புரம் உப்பிலிபாளையம் செந்தூரம் காலனி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் கடந்த 14 ஆண்டுகளாக திருப்பூர் அருள்புரத்தை சேர்ந்த தேவகி என்பவர் நடத்தி வந்த தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டில் சேர்ந்து முறையாக பணத்தை மாதம் தோறும் செலுத்தி வந்தோம்.

இந்தநிலையில் கடந்த தீபாவளிக்கு  முன்பாக நாங்கள் அனைவரும்  சீட்டு பணத்தை திரும்ப தாருங்கள் என கேட்டோம். அதற்கு தேவகி  காலதாமதம் செய்து வந்தார். 

இந்தநிலையில் பணத்தை திருப்பி தருவதாக சொன்ன தேவகியை கடந்த ஒரு வாரகாலமாக காணவில்லை. நாங்கள் அனைவரும் சேர்ந்து சுமார் ரூ.35 லட்சத்திற்கும் அதிகமாக அவரிடம் செலுத்தியுள்ளோம்.

தற்போது அவர்  தலைமறைவாகி விட்டார். எனவே எங்களிடம் முறையாக ஏலச்சீட்டு தொகையை திருப்பி தராமல் ஏமாற்றி  சென்ற தேவகி மீது  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில்  கூறியுள்ளனர்.
Tags:    

Similar News