உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

Published On 2021-12-03 09:43 GMT   |   Update On 2021-12-03 09:43 GMT
நீதிபதி அமர்வு இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருப்பூர் மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு வழக்கறிஞர், 2வாரங்களுக்குள் மனுவை பரிசீலனை செய்து கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு அதற்கான அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமர்வு இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News