உள்ளூர் செய்திகள்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கிய போது எடுத்த படம்.

திருவாரூரில் 1,027 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

Published On 2021-12-02 13:33 GMT   |   Update On 2021-12-02 13:33 GMT
திருவாரூரில் 1,027 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி 1,027 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தமிழக அரசு கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் பொருட்டு நலவாரியம் அமைத்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களான 818 பேருக்கு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்திற்கான கல்வி நிதி உதவி தொகை, 8 பேருக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பில் திருமணம் நிதி உதவி தொகை, ஒருவருக்கு ரூ.500 மதிப்பில் கண்கண்ணாடி நிதி உதவி தொகை, 28 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் நிதி உதவி தொகை மற்றும் 172 பேருக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியம் நிதி உதவி தொகை என மொத்தம் 1,027 பேருக்கு ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஸ்ரீதர், கண்காணிப்பாளர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News