செய்திகள்
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.

5 மாதத்தில் எண்ணற்ற திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

Published On 2021-11-27 11:23 GMT   |   Update On 2021-11-27 11:23 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 85 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 40 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர்.
பல்லடம்:

பல்லடம் நகராட்சியில் மக்கள் குறை கேட்பு முகாம் மணி மண்டபம், எம்.சி.திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் விநாயகம் முன்னிலை வகித்தார். 

முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :-

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 5 மாத காலத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 85 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 40 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 

அரசு மேற்கொள்ளும் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்பநாபன்,பல்லடம் நகர தி.மு.க. பொறுப்பாளர் ந.ராஜேந்திரகுமார், பல்லடம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்கள். சோமசுந்தரம் (கிழக்கு), கிருஷ்ணமூர்த்தி (மேற்கு), ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், முன்னாள் நகராட்சி தலைவர் சேகர், இளைஞரணி ராஜசேகர், நகரப் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெகதீஷ், விமல் பழனிசாமி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News