செய்திகள்
கோப்புபடம்

விண்வெளி வார விழா பேச்சுபோட்டி - வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு

Published On 2021-11-26 10:56 GMT   |   Update On 2021-11-26 10:56 GMT
6 முதல் 8ம் வகுப்பு பிரிவு பேச்சு போட்டியில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நந்தினி, மூன்றாமிடம் பெற்றார்.
உடுமலை:

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா நடத்தப்பட்டது. ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. 

இப்போட்டியானது ஒன்று முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு என நான்கு பிரிவுகளில் இடம் பெற்றது.அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆன்லைனில் சான்றிதழ்கள் மட்டுமின்றி முதல் பரிசாக தொலைநோக்கி, இரண்டாம் பரிசாக பைனாகுலர், மூன்றாம் பரிசாக மடிப்பு நுண்ணோக்கி வழங்கப்பட்டது.

சிறப்பு பரிசாக சி.டி., புத்தகங்கள் அளிக்கப்பட்டன. அவ்வகையில் 6 முதல் 8ம் வகுப்பு பிரிவு பேச்சு போட்டியில் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நந்தினி, மூன்றாமிடம் பெற்றார். அவருக்கு கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், மடிப்பு நுண்ணோக்கி மற்றும் சான்றிதழை வழங்கினார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் ரமாநாச்சியார் உடனிருந்தார்.
Tags:    

Similar News