செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 775 பேருக்கு கொரோனா தொற்று

Update: 2021-11-18 14:36 GMT
தமிழகத்தில் தற்போது 9,078 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 896 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 1,01,635 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையில் மட்டும் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை  27,17,978 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26,72,564 பேர் குணமடைந்துள்ளனர். 36,336 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 5,56,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இன்று 112 பேர் பாதிக்கப்பட மொத்த பாதிப்பு 2,48,774 ஆகும்.

தற்போது தமிழகத்தில்  9,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News