செய்திகள்
மனு கொடுக்க வந்த கிராமமக்கள்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் கிராமமக்கள் மனு

Published On 2021-11-18 10:37 GMT   |   Update On 2021-11-18 10:37 GMT
புதிதாக அமையவுள்ள டாஸ்மாக்கடை அருகே ஏராளமான குடும்பங்கள் உள்ளது.
மங்கலம்:

திருப்பூர் ஒன்றியம் இடுவாய் கிராம மக்கள் இன்று மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சின்னக்காளிபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக எங்கள் கவனத்திற்கு வந்தது. மதுவாசனை இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என இடுவாய் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இடுவாய் ஊராட்சி - சின்னக்காளிபாளையம் அருகே புதிய டாஸ்மாக்கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூகவிரோதிகளால் பாதிக்கப்படுவர். பல இன்னல்கள் ஏற்படும் என அஞ்சுகின்றனர். மேலும் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக்கடை அருகே ஏராளமான குடும்பங்கள் உள்ளது.

ஆகவே எங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு வழங்கும்போது இடுவாய் அருகே உள்ள 63 வேலம்பாளையம், அறிவொளிநகர் பகுதி கிராம மக்களும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News