செய்திகள்
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தொடரும் கனமழை- பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்த பிரதமர்

Published On 2021-11-07 16:52 GMT   |   Update On 2021-11-07 16:52 GMT
சென்னையில் கனமழை தொடர்வதால், சாலைகளில் மழைநீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதிகாலை முதலே கன மழை தொடர்வதால், சாலைகளில் மழைநீர் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.

சென்னையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  தமிழகத்தின் மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று என உறுதி அளித்தார். பொதுமக்கள் அனைவரும் நலமாகவும், பாதுகாப்புடனும் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News