செய்திகள்
கோப்புபடம்

கிராம ஊராட்சிகளில் ‘மெகா’ மரக்கன்று நடும் திட்டம் - விரைவில் தொடக்கம்

Published On 2021-10-28 06:27 GMT   |   Update On 2021-10-28 06:27 GMT
தற்போது பெய்து வரும் மழையில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன.
திருப்பூர்:

தமிழகம் முழுவதும் பரவலாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையடுத்து அதலபாதாளத்துக்கு சென்றுள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பெய்யும் மழைநீரை சேமித்து வைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

பசுமையை பாதுகாக்க பெருமளவில் மரக்கன்று நட்டு வளர்க்கவும் அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்கேற்ப பெரும்பாலான ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையில் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன.  

இந்த வாய்ப்பை பயன்படுத்தி குளம், குட்டை, நீர்நிலை ஓரங்களில் மரக்கன்று நட்டு வளர்க்க ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். அவ்வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மெகா மரக்கன்று நடும் திட்டத்தை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக கிராம ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் மரக்கன்று நடுவதற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News