செய்திகள்
கோப்புபடம்.

தீபாவளி கூட்ட நெரிசல் - உடுமலையில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்க போலீசார் ஏற்பாடு

Published On 2021-10-26 07:12 GMT   |   Update On 2021-10-26 07:12 GMT
முதல் கட்டமாக அதிக நெரிசல் ஏற்படும் தளி ரோட்டில் பார்க்கிங் விதிமுறைகள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது.
உடுமலை:

உடுமலை நகரில் தளி ரோடு வ.உ.சி வீதி கல்பனா ரோடு உட்பட வணிக கடைகள் அமைந்துள்ள பகுதியில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும்.  

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களால் கடந்த சில நாட்களாக நகர ரோடுகளில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக அதிக நெரிசல் ஏற்படும் தளி ரோட்டில் பார்க்கிங் விதிமுறைகள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. ரோட்டில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடத்தில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டன.

இந்த ரோட்டில் நான்கு சக்கர வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு குட்டைகளில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 

இதேபோல் தாராபுரம் ரோட்டில் பேரிக்கார்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News