செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு - நாளை நடக்கிறது

Published On 2021-10-21 07:39 GMT   |   Update On 2021-10-21 07:39 GMT
முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14 - ந்தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 1 - ந்தேதி நடந்தது.
திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை 22 - ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

முதல் கட்ட கலந்தாய்வு  செப்டம்பர் 14 - ந்தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 1 - ந்தேதி நடந்தது. முதுநிலைப்பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பன்னாட்டு வணிகவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய துறைகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இறுதிகட்ட கலந்தாய்வு நாளை 22 - ம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி  வளாகத்தில் நடக்கிறது. இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் சான்றிதழ்களையும், அதன் நகல்களையும் கலந்தாய்வின்போது கொண்டு வருதல் அவசியம். முதல் இரண்டு கலந்தாய்வில் பங்கு பெறாதவர்களும், பங்கு பெற்று இடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் இதில் பங்கேற்கலாம் என கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்தார். 
Tags:    

Similar News