செய்திகள்
கைது

சேலத்தில் லாரி திருடிய ஈரோடு வாலிபர் கைது

Published On 2021-10-18 08:02 GMT   |   Update On 2021-10-18 08:02 GMT
சேலத்தில் லாரி திருடியது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). லாரி டிரைவரான இவர் தூத்துக்குடியில் இருந்து டாரஸ் லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் வந்தார்.

கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் லோடு இறக்கி விட்டு நெத்திமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் லாரியை நிறுத்தினார். பின்பு தண்ணீர் குடிக்க சென்ற அவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணாமல் திடுக்கிட்டார்.

இது குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் பங்கில் இருந்து சற்று தொலைவில் ஒருவர் அந்த லாரியை ஓட்டி சென்றது தெரியவந்தது.

உடனே லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கவின்குமார் (21) என்பது தெரியவந்தது. அவர் தற்போது நெத்திமேடு கொடம்பை காடு பகுதியில் தங்கியிருந்து டையிங் பேக்டரியில் வேலை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கவின் குமாரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News