செய்திகள்
கோப்புபடம்

டிரான்ஸ்பார்ம் செலவை விவசாயிகளிடம் வசூலிக்கக்கூடாது-மின்குறை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2021-10-17 07:58 GMT   |   Update On 2021-10-17 07:58 GMT
டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவு அதிகம் என்பதால் விவசாயிகளால் அத்தொகையை செலுத்துவது இயலாத காரியம்.
திருப்பூர்:

புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்து அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. மேலும்  பல இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டிய தேவை உள்ளது.

புதிதாக மின் இணைப்பு பெரும் விவசாயிகளிடம் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவை ஏற்க வேண்டும். அப்போதுதான் மின் இணைப்பு தருவோம் என்று இதுவரை மின்வாரிய அலுவலர்கள் விவசாயிகளிடம் தெரிவித்து வந்தனர்.

டிரான்ஸ்பார்மர் அமைக்கும் செலவு அதிகம் என்பதால் விவசாயிகளால் அத்தொகையை செலுத்துவது இயலாத காரியம். எனவே பல விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்  சமீபத்தில் மின் குறை தீர்ப்பாயம் மின் நுகர்வோரிடம் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான செலவை வசூலிக்கக் கூடாது. வசூலித்த பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால்  திருப்பூரில்  புதிய மின் இணைப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News