செய்திகள்
இடமாற்றம்

சிறையில் கைதிக்கு உதவிய சிறை காவலர்கள் 3 பேர் இடமாற்றம்

Published On 2021-10-16 08:17 GMT   |   Update On 2021-10-16 08:17 GMT
திருச்சி மத்திய சிறையில் கைதிக்கு உதவியதாக 3 சிறைக் காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:

மதுரையை சேர்ந்தவர் காளி என்கிற வெள்ளக்காளி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அங்கு சிறையில் இருந்தபடியே செல்போன் பேசிய புகாரின்பேரில் அங்கிருந்து கடந்த மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதி 1-ல் அவர் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் திருச்சி மத்திய சிறையில் வெள்ளக்காளியிடம் சிறைக்காவலர்கள் சிலர் அடிக்கடி ரகசியமாக பேசி வந்ததுடன், அவருக்கு உதவிகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சிறை உளவுப்பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் சிறைக்காவலர் ஜெயகுரு பெரம்பலூர் கிளைச் சிறைக்கும், சிறைக்காவலர் பிரசாத் துறையூர் கிளைச் சிறைக்கும், அழகுமுத்து பாபநாசம் கிளைச் சிறைக்கும் இடமாற்றம் செய்து திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருச்சி மத்திய சிறையில் கைதிக்கு உதவியதாக 3 சிறைக் காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News