செய்திகள்
கோப்புபடம்

எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம்

Published On 2021-10-13 09:39 GMT   |   Update On 2021-10-13 09:39 GMT
கடந்த 9-ந்தேதி அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் மகா சண்டி ஹோமம் பெருவிழா தொடங்கியது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை சிறப்பு பூஜை, ஹோமம் ,மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கிராமசாந்தி நடந்தது. 

நேற்றுசிறப்பு பூஜைகள் முதல் யாக பூஜைகள், மகா தீபாராதனை நடந்தன. சண்டி ஹோமத்தை ஸ்ரீநாத் சுவாமிகள் நடத்தினார்.

முன்னதாக கடந்த 9-ந்தேதி அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

ஹோமத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தங்கமணி ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், கோபால், சாந்தி, ஜோதி, ராஜன், வெங்கடேஷ் (காங்கிரஸ்), கனகசபாபதி, சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணியம், பாலசுப்ரமணியம், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், மனோகர்ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News