செய்திகள்
கோப்புபடம்

மருத்துவ ஜவுளி உற்பத்தி - இந்தியா 2ம் இடம்

Published On 2021-10-07 04:28 GMT   |   Update On 2021-10-07 04:28 GMT
அசர்பைஜான் முதலீட்டாளர்கள் இந்தியாவில் நேரடியாக அல்லது கூட்டு முயற்சியால் உற்பத்தி தலங்களை அமைக்கலாம்.
திருப்பூர்:

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) மற்றும் அசர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வர்த்தக விரிவாக்கம் தொடர்பான ‘ஆன்லைன்’ சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் திருப்பூரை சேர்ந்த ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசியதாவது:

செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது. மருத்துவ ஜவுளி உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

பி.எல்.ஐ., திட்டம், விளையாட்டு சீருடைகள், விஞ்ஞான உடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. அசர்பைஜான் முதலீட்டாளர்கள் இந்தியாவில் நேரடியாக அல்லது கூட்டு முயற்சியால் உற்பத்தி தலங்களை அமைக்கலாம். 

மருத்துவம், தொழில்நுட்ப ஜவுளி, மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி உற்பத்தியை இந்தியாவிடம் இருந்து பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News