செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகள் படுகொலை - உழவர் உழைப்பாளர் கட்சி கண்டனம்

Published On 2021-10-05 09:20 GMT   |   Update On 2021-10-05 09:20 GMT
ஆளுகின்ற அரசு அவருடைய அடியாட்களை வைத்து உழுகின்ற உழவர் பெருமக்களை சுட்டு பொசுக்குவது என்பது வெள்ளையர் கால ஆட்சியை நினைவூட்டுகிறது.
பல்லடம்:
 
உத்தரப்பிரதேச விவசாயிகள் படுகொலைக்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பல்லடத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற இடத்தில் பாரதிய ஜனதா எம்.பி.க்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மகன் மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் காரை ஏற்றி 2 விவசாயிகளை கொலை செய்துவிட்டு தப்பி ஓடும்போது, துரத்திய விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். 

பின்பு அந்த இடத்தில் நடைபெற்ற கலவரத்தில் விவசாயிகள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். ஆளுகின்ற அரசு அவருடைய அடியாட்களை வைத்து உழுகின்ற உழவர் பெருமக்களை சுட்டு பொசுக்குவது என்பது வெள்ளையர் கால ஆட்சியை நினைவூட்டுகிறது.

இந்த சம்பவத்தை உழவர் உழைப்பாளர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில செயலாளர் ஈஸ்வரன், ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News