செய்திகள்
கோப்புபடம்

ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக புத்தகங்கள் வழங்கலாம்

Published On 2021-09-30 06:22 GMT   |   Update On 2021-09-30 06:22 GMT
பள்ளியில் 5 ஆயிரத்து 500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்த ஏற்கனவே உள்ள நூலகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்திற்கு கூடுதல் புத்தகங்கள் நன்கொடையாக வழங்க விரும்புவோர் முன்வரலாம் என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:

பள்ளியில் 5 ஆயிரத்து 500 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களின் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்த ஏற்கனவே உள்ள நூலகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இருப்பினும் தற்போதைய சூழலுக்கேற்ப புத்தகங்கள் மிக குறைவு. 

எனவே விரும்பும் தன்னார்வலர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகஙகள் வழங்கலாம். நுழைவாயிலின் முன்பு ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் புத்தகங்களை வைத்து விட்டு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News