செய்திகள்
பலியான ரமேஷ்.

தாராபுரம் பஸ் நிலையத்தில் போதையில் மயங்கி கிடந்த தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

Published On 2021-09-22 11:14 GMT   |   Update On 2021-09-22 11:14 GMT
பஸ் டிரைவர் சேகர், கண்டக்டர் அழகர் சாமி ஆகியோர் தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர்.
தாராபுரம்:
 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் மதுரை - திண்டுக்கல் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி ரமேஷ் (வயது 40) என்பவர் குடிபோதையில் மயங்கி கிடந்தார். 

அப்போது திருப்பூரில் இருந்து சிவகங்கை செல்லும் பஸ் ரமேஷ் மீது ஏறி இறங்கியது. இதில் ரமேஷ் பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பஸ் டிரைவர் சேகர், கண்டக்டர் அழகர் சாமி ஆகியோர் தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தனர். உயிரிழந்த ரமேசின் உடலை போலீசார் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் குடிபோதையில் குடிமகன்கள் இரவு பகல் பாராமல் சாலையிலேயே படுத்து உறங்குவது தொடரும் சம்பவமாக உள்ள நிலையில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சாக்கு தைக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News